உடுவில் ஞானவைரவர் ஆலய சித்திரைப்புத்தாண்டுக்கொண்டாட்டம்

உடுவில் ஞானவைரவர் ஆலயத்தின் சித்திரைப்புத்தாண்டுக்கொண்டாட்டம் நேற்று 20.04.2018 வெள்ளிக்கிழமை மாலை 07 மணியளவில் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன், வலிகாமம் தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் விருந்தினர்களின் உரைகள், சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன், விருந்தினர்களால் சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்