புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆரம்பம்!!

புதிய அமைச்சரவை நாளைமறுதினம் திங்கட்கிழமை பதவியேற்றதும், புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, அரசமைப்பு உருவாக்க வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் தெரிவித்தார்.

அல­ரி­மா­ளி­கை­யில் புது ­வ­ரு­டத்தை முன்­னிட்டுச் செய்­தி­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னரைத் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்துச் சுமு­க­மாகக் கலந்­து­ரை­யா­டி­னார். இந்த நிகழ்­வில் கலந்து கொண்­டி­ருந்த மேற் படி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அர­ச­மைப்பு உரு­வாக்­கல் சம்­பந்­த­மான விட­யங்­க­ளைச் சுட்­டிக்­காட் ­டினார்.

2015 ஆம் ஆண்டு நாடா­ளு­ மன்­றத் தேர்­தல் முடி­வ­டைந்து அரசு பத­வி­யேற்­ற­தன் பின்­னர் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நோக்­கில் நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யின் கீழ் வழி­ந­டத்­தற் குழு நிய­மிக்­கப்­பட்­டது.

வழி­ந­டத்­தற் குழு ஆறு விட­யங்­க­ளைக் கையாள்­­வதற்கு ஆறு உப­கு­ழுக்­களை நிய­மித்­தது. இதன் பின்­னர் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வால் ஏழா­வது உப­குழு­வும் நிய­மிக்­கப்­பட்­டது.

உப­கு­ழுக் ­க­ளின் அறிக்கை 2016ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் நாடா­ளு­மன்­றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. வழி­ந­டத்­தல் குழு­வின் அறிக்கை மிக நீண்ட இழு­ப­றி­யின் பின்­னர் கடந்த ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 24ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் சமர்­ப் பிக்­கப்­பட்­டது.

இந்த அறிக்­கை­கள் மீதான விவா­தம் ஒக்­ரோ­பர் மற்­றும் நவம்­பர் மாதம் இடம்­பெற்­றது. விவா­தங்­கள் முடி­வ­டைந்த பின்­னர் புதிய அர­ச­மைப்பை வரை­யும் பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனி­னும், உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் கார­ண­மாக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் கூட்டு அர­சுக்­குள் ஏற்­பட்ட குழப்­பம் கார­ண­மாக அந்த முயற்சி தொட­ரப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யி­லேயே, நாளை மறு­தி­னம் இடம் ­பெ­றும் அமைச்­ச­ரவைப் பத­வி­யேற்­பின் பின்னர் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் மீள­வும் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்று, வழி­ந­டத்­தற் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருமான அவர் குறிப்­பிட்­டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்