தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்கடத்தலில் சிக்கவர்கள் மற்றும் கட்டாய வேலையில் தள்ளப்பட்டவர்களை கண்டறிவதற்கான பிரத்யேக உதவி மையத்தை ரயில்வே காவற்துறை விரைவில் அமைக்கயிருக்கின்றது.

அண்மையில் ‘ஆட்கடத்தலின் பாதிப்பு’ தொடர்பாக நடந்த கூட்டத்தில் பேசிய ரயில்வே காவற்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சைலேந்தர் பாபு, “பெரிதும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றூம் பெண்களை அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மூத்த காவற்துறை அதிகாரிகளும், 82 ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்களும் பங்கேற்றிந்தனர்.

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான உதவி மையம் சோதனை முயற்சியில் அமைக்கப்பட்டு, அது பலனளிக்கும் பட்சத்தில் வேறு இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு பொறுத்தமட்டில், இந்தியாவில் 8,132 ஆட்கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 434 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வேலைத்தேடி வடமாநிலங்களிலிருந்து நாளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தென்னிந்திய மாநிலங்களுக்கு வந்து கொண்டிருக்கும் சூழல் பல ஆண்டுகளாக இருந்த வருகின்றது. இவர்களில் பலர் ஆட்கடத்தலில் சிக்கியுள்ளதும், அப்படியானவர்கள் ரயில்கள் வழியாகவே அந்தந்த பகுதிகளை அடைவதாகக் கூறப்படுகின்ற சூழலிலேயே இம்முயற்சியை ரயில்வே காவற்துறை மேற்கொள்ள இருக்கின்றது.

இந்தியாவில் நிகழும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான புதிய மசோதா நாடாளுமன்ற சம்மதத்திற்காக நிலுவையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்