வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று மாலை இடம் பெற்ற ஆட்டமொன்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை இந்த ஆட்டம் இடம்பெற்றது. இதில் இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணியை எதிர்த்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி மோதியது.

50:19 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்