சற்றும் எதிர்பார நிலையில் நடந்துள்ள சோகம்

யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியின் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளியில் சென்றுக்கொண்டிருந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்