சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு குவியும் பாராட்டு!!

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்த் பகுதியில் புதர் நிறைந்த இடத்தில் வழி தவறி சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தையை 16 மணி நேரம் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட நாய்க்கு பாராட்டு குவிகிறது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தை அரோரா. அரோரா விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த போது எதிர்பாராத விதமாகப் பாதை மாறிச் சென்றார்.

அரோராவை அவரது வீட்டு நாய் மேக்ஸ் பின் தொடர்ந்து சென்றது. மேக்ஸுக்கு வயது 18 ஆகிவிட்டது. அதனால் காது கொஞ்சம் மந்தம் கண்ணிலும் குறைபாடு உள்ளது. இருப்பினும் குழந்தையைப் பின் தொடர்ந்த மேக்ஸ் குழந்தை ஒரு புதர்ப் பகுதியில் சிக்கிய போது அங்கேயே அக் குழந்தைக்கு துணையாகத் தங்கியது. சுமார், 16 மணி நேரம் குழந்தையுடன் அந்த நாய் தங்கியிருந்தது.

இதற்கிடையில் குழந்தையைத் தேடிய குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தனர். பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் வீட்டிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள பகுதியில் அரோரா மீட்கப்பட்டார். அரோராவுக்கு துணையாக இருந்து நாய் மேக்ஸுக்கு பாராட்டு குவிகிறது.

குயின்ஸ்லாந்து காவல்துறையினர் ஒருபடி மேலே சென்று மேக்ஸின் புகைப்படத்தை தங்கள் அதிகாரபூர்வ கீச்சகத்தில்பகிர்ந்து வெல்டன் மேக்ஸ் என்று பாராட்டியுள்ளனர். அத்துடன் பொலிஸ் துறையில் மேக்ஸுக்கு கௌரவப் பதவி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்