உதவும் கரங்களால் மாணவர்களின் கல்வித்துறைக்கு பாடநூல் வழங்கி வைப்பு

வலிகளை களைந்து வந்த உதவும் கரங்கள் மாணவர்களின் கல்வித்துறையிலும் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவுசெய்து வருகின்ற உதவும் கரங்களின் இன்றைய நிகழ்கால பதிவாக வருகின்றது.

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அ, த, க , பாடசாலைக்கு , பாடசாலை முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க தரம் 5 மாணவர்களுக்கான பயிற்சி பாடநூல்களை பெற்று வழங்கியுள்ளோம்.

தந்தை:- பூ. கிட்டிணன் , தாயார்:- சடச்சி ஆகியோர் ஞாபகமாக மகன் தனபாலசிங்கம் ( இத்தாலி ) அவர்களால் வழங்கப்பட்டது. பாடநூல்களை வழங்க எமக்கு நிதி உதவியை வழங்கியிருந்தார்.

மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் எங்கள் பணியாளர்கள் ஒரு பிரிவினரின் நிகழ்கால நிழல்பிரதி இவைகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்