இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய நாய்! (Video)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் உயிரை நாயொன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்ற போதும் தற்போது தான் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

யால தேசிய பூங்காவை பார்வையிடச் சென்று சுற்றுலா பயணிகள் சிறுத்தை ஒன்றிடம் சிக்கியுள்ளனர்.

எனினும், அங்கிருந்த நாயொன்றின் மூலம் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் சிறுத்தையும் விரட்டப்பட்டுள்ளது.

நாயின் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியை சுற்றுலா பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்