வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே! முன்னாள் பிரபலம் அதிரடி!

வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவுகளை வழங்கிய கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்வதற்கு எவருக்கும் முதுகெலும்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உத்தரவின்றி எதுவும் இடம்பெற்றிருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவினை பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பாதுகாப்பு செயலாளரோ வழங்கியிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்ய வேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பாதள உலகத்தவர்களுடன் எவருக்காவது தொடர்பிருந்தால் அவர் உடனடியாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள மேர்வின் சில்வா படுகொலைகளில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்