இறைச்சி சாப்பிட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

புஸ்ஸல்லாவை – ஹல்தும்முல்லை பகுதியில் இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கியதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.எம்.சோமாவதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இவர் இறைச்சி சமைக்கும் போது ஒரு துண்டு இறைச்சியை சாப்பிட்டுள்ளார். இதன்போது இறைச்சித்துண்டு தொண்டையில் சிக்கியதில் அவர் அவதியுற்றுள்ளார்.

இவரை உடனடியாக ஹல்தும்முல்லை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்னி உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்