தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் !!

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாண நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ. சுமந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்வில் கலந்து மலர் மாலை அணிவித்து, அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்