ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு- உறுப்பினர் வெளிநடப்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்