மகளிர் அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் !!

திருகோணமலை மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்டச் செயலர் என்.பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் மகளிருடைய அபிவிருத்தி சார் செயற்பாடுகள் முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

அதில் இலங்கை பெண்கள் செயலகத்தின் பனிப்பாளர் சம்பா உபசேன, சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்