கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி பூநகரி நல்லுர் பகுதியில நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பூநகரி பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர் எனவும், விபத்து தொடர்பான விசாரணைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பரந்தன் பூநகரி வீதியில் குறித்த விபத்து சம்பவம்இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்