வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

வ. ராஜ்குமாா்

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விசேட வேலைத்திட்டத்தின் மற்றுமெரு கட்டமாக பழுதடைந்த வீதிகளை செப்பனிட்டு பொது மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுத்தல் செயற்திட்டம்.

இவ் விசேட வேலைத்திட்டத்தின் முதலாவது பணி அபயபுர வட்டாரத்தில் இன்று 26ம் திகதி காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் ஆரம்பமானது.

இப்பணிகள் தொடர்ச்சியாக திருகோணமலை நகரசபையில் உள்ள 11 வட்டாரங்களிலும் இடம்பெறவுள்ளது.என தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தர்.

இந்நிகழ்வில் உபதலைவர் சே.சிறிஸ்கந்தராஜா உறுப்பினர்களான கா.கோகுல்ராஜ் எஸ்.யுவராஜ்குமாா் மற்றும் கே.வீ. காமினி பி.டபியு.சுசந்த எம்.எம்.முக்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்