அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்! அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மாலபே பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் அரசியல் கொள்கையாக இருந்தது எனவும் இதனால், அதனை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டியது அத்தியவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஓரிடத்தில் அதிகாரம் குவிந்து கிடப்பதை தடுத்து அதனை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு பகிரும் வகையில் தாம் இந்த திருத்தச் சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்