இத்தனை உறுப்புக்களை மாற்றம் செய்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!!

பிரிட்டனைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கல்லீரல், சிறுநீரகம் உட்பட ஐந்து முக்கிய உறுப்புக்களை மாற்றி சிகிச்சையினை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பிர்மிங்காமில் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுவனுக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் குறித்த சிறுவனின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், சிறு குடல் ஆகியவற்றில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உறுப்புகளை அகற்றிவிட்டு, மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சிறுவன் உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் மருத்துவர்களின் முயற்சியால், குறித்த சிறுவனுக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்