தேசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில்! வவுனியாவிற்கு 4 பதக்கம்!!

தெற்காசிய விழையாட்டு தெரிவுக்காக தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு வவுனியாவைச் சேர்ந்த விழையாட்டு வீரர்கள் மூன்று பேர் நான்கு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
> கடந்த 2018 ஏப்ரல் 23 தொடக்கம் 26 வரை கொழும்பு சுகதாச விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், பயிற்றுவிப்பாளர் குமார் நவநீதன் தலைமையில் பங்குபற்றிய சிவநாதன் கிந்துசன் (19) பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களையும், ஆனந்தராஜா தனுசன் (19) பத்தாயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் ஒரு வெள்ளி பதக்கத்தையும், சம்மட்டி எறிதல் போட்டியில் எஸ். ஜனோஜன் (22) ஒரு வெண்கலப்பதக்கத்தையும் தமதாக்கியிருந்தனர்.
> கொழும்பில் எதிர்வரும் 06-05-2018 தொடக்கம் சுகதாச விழையாட்டு மைதானத்தில் நடைபெறவுன்ள தெற்காசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தேசிய ரீதியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற சிவநாதன் கிந்துசன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்