நேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..!

நேற்று 2.30 மணிக்கு மரணித்த குழந்தையின் முகம் வானில் தோன்றிய அதிசயம்..! கண்ணீரில் நிறைந்த மக்களின் விழிகள்..!

ஒவ்வொரு குழந்தையும் வரம்..குழந்தைகள் சுமக்க தாய் படும் அதே வலியை துன்பத்தை வளர்க்க தந்தை படுகிறார். ஆனால் அந்த குழந்தை உலகத்தை விட்டு பிரிந்து விடும் என்று தெரியும் நொடியில் தந்தையும் மனதால் மரணித்து விடுகிறான்.

பிரித்தானியாவில் சிதைவு நோயால் (degenerative disease) பாதிக்கப்பட்ட ஆல்பி இவான் என்ற குழந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிருக்கு போராடி வந்துள்ளான்.

இக்குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இவரது தந்தை தனது குழந்தை குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டதன் மூலம் பிரித்தானிய மக்களின் இதயங்களில் இக்குழந்தை இடம்பிடித்தது.
நலமுடன் இக்குழந்தை வீடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி தனது மூச்சை நிறுத்திக்கொண்டான் இவான்.
நேற்று 2.30 மணியளவில் இக்குழந்தை இறந்துவிட்டது என அவரது தந்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்த ஏராளமானோர் மருத்துவமனையிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதில், ஒரு பகுதியாக இவானின் பெயரை பலூனில் எழுதி அதனை வானத்தில் பறக்கவிட்டனர்.

அந்த பலூன்கள் பறந்துசென்றபோது மேகத்தில் இவானின் முகம் தென்பட்டதை மக்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இவான் நம்மோடு தான் இருக்கிறான். வானில் இருந்து நம்மை பார்க்கிறான் என கூறியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்