சற்று நேரத்தில் அமைச்சரவை மாற்றம்! விஜயதாசவுக்கு பதவி? பிரதமர், ஜனாதிபதி வருகை

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந் நிலையில் ஜனாதிபதியும் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோரும் வந்துள்ளனர்.

இதில் முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரான விஜயதாச ராஜபக்ஸவுக்கு உயர்கல்வி அமைச்சுப்பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்