தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்

தொழிலாளர் தினத்தை மே 7 ஆம் திகதிக்கு அரசாங்கம் ஒத்திவைத்தாலும் சில கட்சிகள் மற்றும் தொழிற்சங்களும் இன்று அதனை கொண்டாடுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது.

இதற்கிடையில் ஜே.வீ.பியின் மே தினக் கூட்டம் யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்