கூட்டமைப்பின் மாபெரும் மே தின நிகழ்வு (video)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது தமிழீழ எழுச்சிக் பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான பேரணி மைக்கல் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்துள்ளது.

இந்நிகழ்விற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், யாழ்.மாநகர சபையின் மேஜர் இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கலந்து இருந்தனர்.

தமிழரின் உரிமைகள், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் வாகன ஊர்திகளும் பேரணியில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே” 01 பிரகடனங்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்