கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின எழுச்சி பேரணி (video)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இவ் பேரணியானது நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் பெருமளவான மக்கள் புடைசூழ ஆரம்பமாகி எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்துள்ளது. மேலும், கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்