புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஆரம்பம்

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போதைய நிலையில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி , நீர்வள நீர் முகாமைத்துவ மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக திலீப் வெதஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஹன்லால் க்ரேரோ உயர் கல்வி மற்றம் கலாசார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் , பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீயானி விஜேவிக்ரம விளையாட்டுத்துறை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வீரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதி அமைச்சர்கள்…

ரஞ்சன் ராமநாயக்க சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக துனேஸ் கங்கந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், அமீர் அலி மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முத்து சிவலிங்கம் உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருந்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சராக செயிட் அலி ஷாயிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிறுவன மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சராக எச்.எம்.என் ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மனுஷ நாணயக்கார தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் , பேண்தகு அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பாலித குமார தெவரப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சராக சாரதி துஸ்மந்த நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்றுமுன்னர் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்