குழந்தையாக மாறிய சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தலைவர்களை நினைவுகூறும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் காலம் சென்ற பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரிவை நினைவு கூரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரிவின் மகள் ஹிருணிக்கா தனது குழந்தையுடன் வருகைத்தந்திருந்தார்.

ஹிருணிக்காவின் குழந்தையுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி விளையாடும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்