கிளிநொச்சியில் ரூ. 90 மில்லியனில் புதிய பாலம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபா செலவில் சீரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்

33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொங்றீட் பணிகளுக்கு, 35 மில்லியன் ரூபாவும், இரும்புப் பாலத்துக்கு 55 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜக்கிய இராஜ்ஜியத்தின் நிதியுதவியுடன்,2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது நிறைவுற்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்