மக்களை வியப்பில் ஆழ்த்திய மைத்திரியின் மருமகன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் வெசாக் போயான தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தன்சல் ஒன்றை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரரான அரலிய வர்த்தக உரிமையாளர் டட்லி சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பொலன்னறுவையில் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு இங்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் தரமான உணவுகளுடன் மிகவும் சுத்தமான முறையில் இந்த உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த உணவு தன்சலுக்கு அருகில் சம்பா அரிசி மூட்டைகள் பாரிய அளவில் பயன்படுத்தி வெசாக் வலையமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்தவித வசூலிப்பு பணமும் பெறாமல் சிறிசேன குடும்ப உறுப்பினர்களால் மக்களுக்கு தன்சல் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்