அதிகம் குடிப்பவர்கள் இவர்கள் தானாம்!!

அதிகமாக மதுபானம் அருந்துபவர்களைப் பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதற்காக பல வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு, வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் படி, அதிகம் குடிப்பழக்கம் உள்ளவர்களாக பணக்காரர்களே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிப் பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்றும் ,ஆயுளை குறைக்கும் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

அதே வேளையில், அளவோடு குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக அமெரிக்கர்களே அதிகம் குடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்கள், தினமும் குடிப்பவர்கள் பட்டியலில் உள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் குறைவாக சம்பாதிப்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறை, வார இறுதி என்றுதான் குடிக்கிறார்கள்.

ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள், தினமும் அதிகளவில் குடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்