மே 04: திப்பு சுல்தான் இறந்த தினம்

1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான வாதிமாவின் மகனாவார்.

பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில- மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில- மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார்.

மே 4, 1799-ம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் போரின் போது இறந்தார்.

திப்புவின் மைசூர் அரசை பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர். ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.

மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன்.

ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம் என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லேச்லி.

ஆடுகளை போல பிழைப்பதை விட புலியை போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்