அனைத்து டுவிட்டர் பாவனையாளர்களுக்கும் ஓர் முக்கிய செய்தி

அனைத்து டுவிட்டர் பாவனையாளர்களும் தங்களது கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டுவிட்டர் வலையமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

டுவிட்டரின் உள்ளக வலையமைப்பின் எண்மான எழுத்தாவணம் ஒன்றில் பாவனையாளர்களின் கடவுச் சொற்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாவனையாளர்களின் கடவுச் சொற்கள் களவாடப்பட்டமை அல்லது முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

எனினும் பாவனையாளர்கள் தங்களது கடவுச் சொற்களை மாற்றிக் கொள்வதன் ஊடாக, பாதுகாப்பினை உறுதி செய்துக் கொள்ள முடியும் என்று டுவிட்டர் அறிவித்துள்ளது.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்கள் தொடர்ந்து இவ்வாறான சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்