கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டுப் போட்டி

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்)

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்கான விளையாட்டு விழா “செயற்பட்டு மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் மழலைகள் சங்கமித்து குறிக்கோள் தவறாமல் கல்லடி சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (9.5.2018) பிற்பகல் 3.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் சுவாமி பிரவு பிறேமானந்தாஜீ சுவாமியின் ஆசியுரையுடன் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் அவர்கள் பிரதம திதியாகவும்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயகக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,தமிழ் உதவிக்கல்வி பணிப்பாளர் டீ.யுவராஜன்,ஆரம்பப்பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம்,இலங்கை வங்கி முகாமையாளர்ரீ.பிரியதர்சன்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விளையாட்டுகள் செயற்பாட்டு வளவாளர் கே.சிவராசா,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.எஸ்.பூபாலசிங்கம்,மற்றும் பிரதியதிபர்களான வீ.அமிர்தலிங்கம், திருமதி.பீ.ராஜகோபாலசிங்கம், திருமதி.எல்.பிறேமகுமார், ஆசிரியர்களான திருமதி.சாந்தி சிவலிங்கம்,நித்தி சிவநாதன்,திருமதி.தயா யோகராசா, திருமதி.சுதர்சன், திருமதி.ரீ.உமாமகேஸ்வரன், திருமதி.நில்மினி கஜேந்திரன்,சுசாந்தினி சிவநாதன்,திருமதி. டிலாணி ராஜ்குமார் உட்பட ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியைகளான திருமதி.கிரிசாந்தி நிமலன் ,செல்வி கே.மிருத்திகா ஆகியோர்களின் சிறப்பான ஒழுங்குபடுத்தலுடன் அவபாமியா, சாரதா, நிவேதிதா இல்ல மாணவிகளுக்கிடையிலான அணிநடை,அஞ்சல் ஓட்டம்,வலைந்து நெலிந்து ஓடுதல்,மிட்டாய் ஓட்டம்,தடைதாண்டல்,பந்துமாற்றுதல்,வளையம் உருட்டுதல்,குந்தியிருந்து பந்து எறிதல்,சைக்கிள் ஓட்டம்,ஏணிஓட்டம்,மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி,ஆசிரியர்கள் நிகழ்ச்சி என்பன இடம்பெற்றது.இதன்போது முதலாம் இடத்தை அவபாமியாவும்,இரண்டாம் இடத்தை சாராதா இல்லமும்,மூன்றாம் இடத்தை நிவேதிதா இல்லமும் தட்டிக்கொண்டது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள்,கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்