இலங்கைப் பெண்ணின் மகனுக்கு 350,000 டொலர்கள் நிதியுதவி

கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகனுக்கு, தனது எதிர்கால செலவினை கருத்திற்கொண்டு 350,000 டொலர்கள் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் டியோனுக்கு 150,000 டொலர்கள் உதவித் தொகை தேவையாக உள்ளதென ‘GoFund’ நிதிதரட்டும் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், எதிர்பார்த்ததை விடவும் அதிகமான பணம் ரேணுகாவின் மகனுக்கு கிடைத்துள்ளது. அதற்கமைய 350,000 டொலர்கள் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் இறுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 45 வயதான ரேணுகா அமரசிங்க என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையின் ஹொரண பகுதியில் பிறந்த ரேனுகா, தனது கணவனை இழந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து குடியுரிமையை பெற்றிருந்தார். பாடசாலையில் மகனை விட சென்று மீண்டும் திரும்பும் போது, இடம்பெற்ற பயங்கரவாத வாகன தாக்குதலில் சிக்கி அவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்