உங்கள் கைகளில் இந்த அறிகுறிகள் உள்ளனவா?

உடலுக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில், கைகளே முதன்மை பெறுகிறது.

முதுமையின் அறிகுறி மட்டுமல்ல, உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

எப்போதும் நாம் சிவந்த கைகளைக் கொண்டிருந்தால, அது உடல் நலக் குறைவுக்கான அறிகுறியாகும்.

இத்தகைய அறிகுறி கல்லீரல் நோயின் ஆரம்பமாக இருக்கலாம்.

நம்மில் ஒரு சிலருக்கு உள்ளங்கை மட்டும் வியர்த்துக் கொண்டே இருக்கும். அடிக்கடி கைக்குட்டை நனைந்து போகும்.

இந்த உள்ளங்கை வியர்தலுக்கான காரணம், இயற்கையாகவே அதிகமாக சுரக்கும் வியர்வை சுரப்பிகள் தான்.
அதிக மன அழுத்தம் காரணமாகவே இந்த நிலை உண்டாகும்.

இதேவேளை, வறண்ட உள்ளங்கைக்கான காரணம் சிறுநீரக கோளாறுகளாகும்.

எனவே எமது கைகளில் இத்தகைய அறிகுறிகள் ஏற்படும் போது, மருத்துவர்களை நாடுவது சிறப்பானதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்