துறைநீலாவணை கண்ணகியம்மன் திருச்சடங்கு நடைபெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கானது எதிர்வரும் செவ்வாய்கிழமை(22.5.2018) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித்திங்கள்(29.5.2018) இடம்பெறும் திருக்குளிர்த்தி பாடுதலுடன் இனிது நிறைவுபெறவுள்ளதாக நடைபெறவுள்ளதாக கலாச்சார உத்தியோகஸ்தரும்,துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய பரிபாலனசபைச் செயலாளருமான ஆ.லெவ்விதன் தெரிவித்தார்.

இவ்வருட திருச்சடங்கில் அம்மன் வீதி உலாவும்,கன்னிக்கால் வெட்டும் நிகழ்வும்,வட்டுக்குத்துதல்,சிலம்பிஷேகம்,திருக்குளிர்த்திபூசை என்பன 25,27,28,29 ஆகிய திகதிகளில் ஆலய பிரதம பூசகர் செ.தருமரெத்தினம் தலைமையில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தில் நித்திபூசைகள்,கலைநிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்