இன்று கொழும்பு வருகிறார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா அதிபர், பிரதமர், மற்றும் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகளையும் இந்திய இராணுவத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், திருகோணமலை, தியத்தலாவ இராணுவத் தளங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்