சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்க காத்திருக்கும் தனுயன்

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ஒரு வீரர்…

யாழ் தெள்ளிப்பளை மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்கும் ரவிகுமார் தனுயன் என்ற வீரர் 16 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள தனுயன் பொறுமை, கோல் அடிப்பதில் நுணுக்கம் என கால்பந்தாட்டத்தில் திறமையான வீரராக திகழ்கின்றார்.

கடந்த வருடம் தெற்காசிய கால்பந்தாட்ட தொடரில் இலங்கை 16 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்காக விளையாடியுள்ள தனுயன் , நேபாளத்தில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட தொடரிலும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தொடரிலும் விளையாடியுள்ள தனுயன் கால்பந்தாட்டத்தில் சர்வதேச அரங்கில் பிரகாசிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றார்.

தந்தையின் தச்சுத்தொழிலில் கிடைக்கும் வருமானம் அன்றாட போசணத்துக்கே போதுமானதாய் இருப்பதால் தனுயனின் கனவுகள் கானல் நீராய் போயுள்ளன.

சர்வதேச அரங்கில் சாதிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் இவரை ஊக்குவிப்பதன் மூலம் சர்வதேச வீரர் ஒருவரை உருவாக்கிய பெறுமையை எமது சமூகம் பெற முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்