தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு

மட்டக்களப்பில் வழமைபோன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒன்பதாவது ஆண்டு வணக்கநிகழ்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18/05/2018,வெள்ளிக்கிழமை மு.ப: 9,மணிதொடக்கம் பி.ப:2, மணிவரையும்
கிரான் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு கூட்டுப்பிரார்த்தனை பொதுச்சுடர் ஏற்றல் மலரஞ்சலி அன்னதானம் நினைவுரைகள் என்பன இடம்பெறும்.
கடந்த 2010,ஆண்டு தொடக்கம் இடைவிடாது தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் முள்ளிவாய்ககால் நினைவுகள் உணர்வு பூர்வமாக செய்துவருவதை யாவரும் அறிந்த ஒன்றே அந்த அடிப்படையில் கடந்த எட்டுவருடங்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை செய்த வணக்க நிகழ்வுகளின் விபரங்கள்:#முள்னிவாய்கால்_நினைவு_வணக்கம் மட்டக்களப்புமாவட்டத்தில் தொடர்ச்சியாக தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூருகின்றோம்:
#1வது ஆண்டு நிகழ்வு இரண்டு இடங்கள்:-
18/05/2010,ல் கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர் ஆலயத்தில் விசேடபூசை,திருவாசகம் முற்றோதல் அன்னதானம்,
19/05/2010,மட்டக்களப்பு மாமாங்கேஷ்வர்ர் ஆலயத்தில் உயிர்நீத்த அனைவரினதும் ஆத்மா சாந்தி வேண்டி பெரும் நினைவு பூசையுடன் அமிர்தகழி தீர்தக்கேணியில் பிண்டங்கள் கரைத்து பெரும் வேழ்விப்பூசை அன்னதானம் நினைவுரைகள் இடம்பெற்றன.
#2வது ஆண்டு நிகழ்வு:-
18/05/2011,ல்
களுவாஞ்சிகுடி மங்கையற்கரசி சிறுவர் இல்லத்தில் விசேட வழிபாடு அன்னதானம் நினைவுரை
#3வது ஆண்டு நினைவு:-
18/05/2012,ல்
அரசடித்தீவு சக்தி சிறுவர் இல்லத்தில் விசேட வழிபாடு அன்னதானம் நினைவுரை
#4வது ஆண்டு நினைவு:-
18/05/2013,ல்
கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வர்ர் ஆலயத்தில் பூசை வழிபாடும் கொக்கட்டிச்சோலை கதிரொளி இல்லத்தில் அன்னதானம் நினைவுரை
#5வது ஆண்டு நினைவு:-
18/05/2014,ல்
வந்தாறுமூலை நிர் மூலப்பிள்ளையார் ஆலயம் விசேட பூசைஆராதனை நினைவு வணக்கம் நினைவு உரைகள்.
#6வது ஆண்டு நினைவு இரண்டு இடங்கள்:-
18/05/2015,ல்
காலை கல்முனை பிள்ளையார் ஆலயத்தில் விசேடபூசை அன்னதானம்.
மாலை பி.ப 4,மணி வவுணதீவு பிரதேசம் ஈச்சந்தீவு ஆலய முன்றல் நினைவு சுடர் ஏற்றி நினைவுக்கூட்டம்.
#7வது ஆண்டு நினைவு:-
18/05/2016,ல்
வந்தாறுமூலை சித்திவினாயகர் ஆலயத்தில் விசேடபூசைவழிபாடு. நினைவுரை அன்னதானம்
#8வது ஆண்டு நினைவு:-
18/05/2017,ல்
வாகரை செல்வவினாயகர் ஆலயத்தில் விசேடபூசை கூட்டுவழிபாடு அன்னதானம் நினைவுரைகள்
#9வது ஆண்டு நினைவு எதிர்வரும்
18/05/2018,ல்
கிரான் சந்தி பிள்ளையார் ஆலயம்
பலகெடுபிடிகள் அச்சுறுத்தல் உயிராபத்துக்கள் நிலவிய கடந்த மகிந்தராசபக்‌ஷ அரசின் காலத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது என மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைபோன்று
இவ்வருடமும் கிரான் பிள்ளையார் ஆலயத்தில்
இடம்பெறும் முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வில் உணர்வுள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழ்தேசியகூட்டமைப்பு அன்புடன் அழைக்கின்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்