விகாரையில் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்

மாதம்பை பகுதியில் சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோதகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் மாதம்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

13 வயதுடைய சிறுவன் மேலதிக வகுப்பிற்கு சென்றுக்கொண்டிருக்கையில், குறித்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றிற்கு அழைத்து சென்று இவ்வாறு பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், இங்குராங்கொடை பகுதியை சேர்ந்தவர் என்பதோடு, விகாரையில் தேரர்களுக்கு உதவியாக செயற்பட்டு வந்துள்ளார்.

சந்தேக நபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்