கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோட்டல்

இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக கொழும்பில் இரகசியமாக ஹோட்டல் ஒன்று நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hotel De Prisons என அழைக்கப்படும் சிறைச்சாலை வைத்தியசாலையே பிரபல ஹோட்டல்களை மிஞ்சி இயங்குவதாக கூறப்படுகின்றது.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி கிடைத்தவுடன் அங்கு விருப்பமான பெக்கேஜினை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

அதற்காக நன்கு செலவு செய்யக்கூடிய அளவு பணம் இருந்தால் மாத்திரம் போதுமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. கருப்பு பணம் இருந்தால் அது மேலதிக தகுதியாக கருதப்படுகின்றது.

இலங்கையின் பிரதான தரப்பு ஹோட்டல்கள் உட்பட கிடைக்காத வசதிகள் இங்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், சிறைச்சாலை வைத்தியசாலையில் கட்டில் ஒன்றை ஒதுக்கி கொள்வதற்கு 25,000 ரூபாய் பணம் அவசியமாகின்றது. அதற்கு மேலும் செலவு செய்வதற்கு வசதி இருந்தால் அடுத்த பெக்கேஜிற்கு செல்லலாம்.

அதற்காக நாள் ஒன்றுக்கு 50,000 ரூபாய் தேவைப்படுகின்றது. இந்த பெக்கேஜை பெற்று கொண்டால் வீட்டில் சமைக்கும் எந்த ஒரு உணவையும் கையிலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இலங்கை பிரதான தரப்பு 5 நட்சத்திர ஹோட்டலான ஹில்டன் ஹோட்டலில் அனைத்து வசதிகளையும் கொண்ட அறைக்கான நாளாந்த கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாகும்.

எனினும் Hotel De Prisons எனப்படும் சிறைச்சாலை ஹோட்டலில் நாள் ஒன்றுக்காக பெக்கேஜ் 312 டொலராகும். இது 5 நட்சத்திர ஹோட்டலையே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்