வெற்றியின் பின்னர் தேவாலயத்திற்குள் நுழைந்த பா.ஜ.கவினரை துரத்தி துரத்தி அடித்த பொலிஸார்: தீயாய் பரவும் காணொளி

இந்தியா கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த பா.ஜ.கட்சியினரை பொலிஸார் துரத்தி துரத்தி அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளுக்கிடையில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றதுடன், குறித்த தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றிருந்தது.

மேலும், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்த்தவ எதிர்ப்பு கொள்கையை பின்பற்றும் குறித்த கட்சியினர் தேவாலயம் மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டமை அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த பாஜக கட்சியினரை அப்பகுதி பொலிஸார் துரத்தி துரத்தி விரட்டியுள்ளதுடன், தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான ஒரு காணொளி ஒன்றும் வெகுவாக பரவி வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்