சுற்றுலா சென்ற மருத்துவ மாணவர்கள் சடலமாக வந்த சோகம்!!

பாகிஸ்தானில் மரப்பாலம் ஒன்று இடிந்த வீழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் lahore மற்றும் Faisalabad நகரங்களைச் சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீளம் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலம் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.

சுமார் 25 மாணவர்கள் இவ்வாறு கும்பலாக நின்று புகைப்படம் எடுத்தமையால் மரப்பாலம் சுமை தாங்காமல் இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது.

எதிர்பாராமல் நடைபெற்ற இந்த அனர்த்தத்தில் குறித்த மாணவர்கள் அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 7 மாணவர்களை உடலமாக மீட்டதுடன் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய மாணவர்கள் காணாமற் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்