லூட்சியாவைத் தோற்கடித்தது சென். ஹென்றிஸ்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், 20 வயது ஆண்கள் பிரிவில் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி.

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாம் பாதியிலும் அதேநிலைதான்.

சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை. 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்