உயிர் பறி போகும் அபாயம்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒருவித வைரஸ் பரவி வருகின்றமையினால் உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரவும் அடையாளம் காணப்படாத நோயினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவொரு ஆபத்தான நிமோனியா நிலைமை எனவும், தென் மாகாணத்தில் நிமோனியா வேகமாக பரவி வருவதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் அருன டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் சாதாரணமாக காணப்பட்ட நோயின் தாக்கம், தற்போது தீவிரம் அடைந்துள்ளது. மாத்தறை, ஹம்பாந்தோட்டை, தங்காலை பிரதேசங்களில் இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிறுவர் பிரிவுகள் உட்பட பல பிரிவுகளில் நோயின் தாக்கத்திற்குள்ளான பலர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இந்த நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களின் உயிருக்கு உட்பட ஆபத்தான நிலைமை ஏற்படும் என வைத்தியர் எச்சரித்துள்ளார்.

இந்த நோய் தன்மை தொடர்பில் அனைத்து வைத்தியர்களும் இணைந்து ஆராய்ந்து பார்த்ததாகவும், இது இன்புளுவென்ஸா மற்றும் எடினோ என்ற வைரஸ் தொற்றினால் ஏற்படுகின்ற கொடூரமான நிமோனியா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் அடுத்த நபரிடம் இருந்து தூரமாக வைப்பது கட்டயாமாகும். இதன் ஊடாகவே நோய் பரவுவதனை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாயர்மார்கள் மற்றும் வயோதிபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலையின் ஊழியர் மற்றும் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக வாய் மற்றும் மூக்கினை மூடிகொள்ளும் முகமூடிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுடன் வயிறு தளர்வடையும் நிலை காணப்படும் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக வைத்தியசாலை செல்லுமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும், தொடர்ந்து சுகாதாரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வைத்தியர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்