சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை 12ம்,13ம் திகதிகளில் நடாத்தியிருந்தார்கள்.

இந்த எல்லே சுற்றுப் போட்டியில் பதினைந்து கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இறுதிப் போட்டிக்கு சொறுவாமுனை மண்னில் அதிக வெற்றிகளை தன்வசப்படுத்திய கழகங்களான விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகமும். தெரிவாகியிருந்தன.

இறுதிப் போட்டி முப்பது பந்துகளை கொன்டதாக நடைபெற்றது. அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆருமுகத்தான் குடியிருப்பு காந்தி அணித்தலைவர் களத்தடுப்பை தெரிவு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய விளாவட்டவான் ராஜா அணியினர் முப்பது பந்துகளை எதிர்கொன்டு ஐந்து ஓட்டங்களை பெற்றுக் கொன்டனர்.

தொடர்ந்து
ஆறு ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய ஆருமுகத்தான் குடியிருப்பு காந்தி அணியினர் ஆறு பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தார்கள்.

அந்த வகையில்
முதலாம் இடத்தினை
ஆருமுகத்தான் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகமும்,
இரண்டாம் இடத்தினை விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும்,
மூன்றாம் இடத்தினை சவுக்கடி ஆதவன் விளையாட்டுக் கழகமும்,
நான்காம் இடத்தினை சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொன்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழக தலைவர் பெ.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் த.ராமகிருஸ்ணன், நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை ஆசியோர் வருகை தந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்