அனுருத்த கைதானார்!! – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு!!

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு தொடருந்துப் பாதை நிர்மாணத்தின்போது 8 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுருத்த பொல்கம்பொலவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அதற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து சில தினங்களிலேயே அவரைப் பதவியில் இருந்து அகற்றினார் மைத்திரிபால சிறிசேன.

அதேவேளை, அரச மரக் கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவரான பீ.திசாநாயக்க 20 மில்லியன் ரூபா கையூட்டுப் பெற்றால் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்