கல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியசாலையின் கவனக்குறைவா..?

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சசிக்குமார் சஞ்சய்ராஜ் (வயது 21) நோய் காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை(14) உயிரிழந்துள்ளார்.

இவருக்கு டெங்குகாய்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர் உரிய சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதியே காதலித்து திருமணம் முடித்த இவர் 11 நாட்களிலேயே உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோக சம்பவமாக அமைந்துள்ளது.

அண்மைக் காலங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீது தகுந்த சிகிச்சைகள் அழிக்கப்படுவதில்லை என பொதுமக்களால் பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

டெங்குவுக்கான ஒழிப்பு முறைகள் பிரதேசமெங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட போதிலும், மட்டக்களப்பில் டெங்குவினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்