யாழில் மது போதையில் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை

யாழ். இருபாலைச் சந்தியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இந்த விபத்து நேற்று பிற்பகல் வேளையில் யாழ். கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு பெண்களும் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ். நகர் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த நிலையில் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இரு பெண்களையும் பொதுமக்கள் மீட்க முயன்ற போது இருவரும் போதையில் தடுமாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தில் 26 மற்றும் 27 வயதுடைய பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்