பன்குடாவெளியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழின அழிப்பு நாளான நாளை மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைமறுதினம்  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, பன்குடாவெளியிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்
நாளைமறுதினம் காலை 9 மணிக்கு இரத்ததானமும் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பூசை வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பன்குடாவெளி ஆற்றங்கரை முற்றத்தில் மாலை 6.30 மணிக்கு உணர்வு பூர்வமாக ஆயிரம் சுடர்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்