வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

இன்று வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல் ஒன்றை அவரது அலுவலகத்தில் இன்று நடாத்தி இருந்தது.

அதன் போது வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயட்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் தமது நிலுவைகளைப் பெற வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் ஆளுநரிடம் எடுத்துக் கூறினார்.

ஆளுநர் உடனடியாகவே மத்திய திறைசேரி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மேலதிகமாக 4 பில்லியன் பணம் வட மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வதட்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மேலும் வட மாகாண பிரதம செயலாளருக்கு ஏற்கனவே இருக்கின்ற நிதியை உடனடியாக விடுவித்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகளை உடன் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்ததார்.

ஆளுநரின் உத்தரவையடுத்து வைத்தியர்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் தொடர் எதிர்வரும் 28ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்ட முடிவுக்கு நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாமல் போய் விடும் எனமருத்துவ அதிகாரிகள் சங்க வட மாகாணம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்