பொலிஸ் உத்தியோகத்தர் யாழிலிருந்து இடமாற்றம்!!

ஆவா என்­ற­ழைக்­கப்­ப­டும் வாள்­வெட்­டுக் குழு­வு­டன் தக­வல்­க­ளைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா றொஷான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார்.

ஆவா குழு­வின் தலை­வர் ஒரு­வ­ரு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பி­லி­ருந்து பொலி­ஸா­ரின் தக­வல்­களை வாள்­வெட்­டுக் குழு­வுக்­குக் கூறி­வந்­தார் என்று மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் குற்­றஞ்­சாட்­டு­கி­றார். அத­னால் குறித்த தமிழ் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். அவர் மீதான குற்­றச்­சாட்டை விசா­ரிக்க பொலிஸ் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­யில் அவர்­மீ­தான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­வித்­தார்.

“மணல் கடத்­து­வோர் பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளுக்­குக் கையூட்டு வழங்­கு­கின்­ற­னர் என்­றும் அத­னைச் சாதா­ரண பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் தடுத்து நிறுத்­தி­ய­தா­லேயே குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு இட­மாற்­றம் வழங்­கப்­ப­டு­கி­றது” என்­றும் ஊட­கங்­க­ளில் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இது தொடர்­பில் பிர­திப் பொலிஸ்மா அதி­பர் தெரி­விக்­கை­யில், “மணல் ஏற்­றப்­ப­டும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளிட்ட இடங்­க­ளில் தற்­போது மணல் ஏற்­றப்­ப­டு­வது முற்­றா­கத் தடுக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் அந்த இடங்­க­ளில் புற்­கள் முளைத்­துள்­ளன. மணல் ஏற்­று­மி­டங்­க­ளில் புற்­கள் முளைக்­காதே. அதனை அந்த இடங்­க­ளுக்­குச் சென்று பார்­வை­யிட முடி­யும்” என்று தெரி­வித்­தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்